மக்களின் உணர்வுக்கும் மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இனி மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடக்கூடாது என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோகக் கூடாது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.