ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் தங்கள் நாட்டில் மட்டுமே நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது 3 நிபந்தனைகளை முன்வைத்து, தங்களது முடிவில் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.