அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார். இந்த தகவலை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் உறுதி செய்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வருண் சக்கரவர்த்தி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.