அதிபர் ட்ரம்பின் உத்தரவை தொடர்ந்து கூகுள் மேப் தரவு தளத்தில் ‘மெக்சிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என அதிகாரப்பூர்வமாக புதுப்பிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற முதல் நாளே சில அதிரடி அறிவிப்புகளையும் மாற்றங்களை அறிவித்து அதிரடி காட்டினார் ட்ரம்ப். அதில் ஒன்றாக மெக்சிகோ வளைகுடா இனி "அமெரிக்க வளைகுடா" என அழைக்கப்படும் என பெயர் மாற்றம் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி கூகுள் மேம்பின் federal mapping தரவுதளத்தில் இனி ‘மெக்சிகோ வளைகுடா’ என்பது ‘அமெரிக்க வளைகுடா’ என அடையாளப்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.