சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலத்துக்கு வரும் 21-ம் தேதி முதல் நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இண்டிகோ நிறுவனத்தின் வர்த்தக தலைமை மேலாளர் சீனிவாசன், நேரடி விமான சேவையால் பயணநேரம் குறைவதோடு, இந்தியா - பினாங்கு இடையே வர்த்த உறவும் மேம்படும் என்றார்.