டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் அதிஷி, ஒரே நாளில் crowdfunding முறையில் 18 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி திரட்டியுள்ளார். தமது தேர்தல் செலவுகளுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், தம்மிடம் எந்த பணமும் கிடையாது என்பதால் ஆதரவாளர்கள் பணம் தந்து உதவுமாறும் அவர் நேற்று சமூகவலைதளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.