சென்னையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 7ஆம் தேதி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஆகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக, அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, திருவள்ளுவர் சிலையை வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். கடும் மோதல் போக்குதமிழகத்தில், ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து மோதல் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு, உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. கேரள ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்து உள்ளார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடன் சந்திப்பு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். Related Link 9 ஆளுநர்கள் அதிரடி மாற்றம் - ஜனாதிபதி உத்தரவு