பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தைவானை சுற்றி வளைத்து இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வரும் சீனா, தைவான் ஜனாதிபதியை ஒட்டுண்ணி என்று அழைத்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தைவான், இராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இராணுவத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது.