இந்திய நிலப்பரப்பில், சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்று ராகுல் காந்தி பேசிய விஷயம், நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. ராகுலின் பேச்சுக்கு இடையூறாக பாஜக எம்.பி.க்கள் கூச்சல் போட, ஆதரவாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குரல் எழுப்ப, மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. ராகுல் காந்தி பேச முற்பட்டது என்ன? பாஜக எம்.பி.க்கள் பதறியது ஏன்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. Four Stars of Destiny நாடாளுமன்ற அவைகளில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில், அவையில் குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, ராணுவ முன்னாள் தளபதி எம்.எம்.நரவானே எழுதிய புத்தகத்தை குறிப்பிட்டு பேச தொடங்கினார். Four Stars of Destiny என்ற அந்த புத்தகம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், புத்தகத்தை மையப்படுத்தி நாளிதழில் வெளிவந்த கட்டுரையை சுட்டிக்காட்டி உரையை தொடங்கினார் ராகுல்காந்தி. நரவானே பொறுப்பில் இருந்த போதுதான், சீனா- இந்தியா இடையே மோதல் நடந்தது. இந்த விவகாரம் தொடர்பாகவும், அக்னிவீர் திட்டம் தொடர்பாகவும் தனது புத்தகத்தில் நரவானே குறிப்பிட்டிருக்கிறார். வழக்கமாக ராணுவ உயர் அதிகாரிகள் எழுதும் புத்தகங்கள், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின்னரே வெளியாகும். ஓய்வுபெற்ற அதிகாரிகள், தகவல்களை வெளியிடுவதற்கான விதிமுறைகளை மீறிவிடக்கூடாது என்பதற்காக இந்த நிபந்தனை இருக்கும் நிலையில், நரவானே எழுதிய புத்தகமும் கடந்த ஓராண்டுக்கு மேலாக பாதுகாப்புத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. Caravan ஆங்கில இதழில் லீக்ஆனால், வெளியிடப்படாத புத்தகத்தின் சில பகுதிகள் Caravan ஆங்கில இதழில் லீக் ஆகி இருக்கிறது. அதில், 2020ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு மோதலின் போது நடந்த நிகழ்வுகளை அந்த புத்தகத்தில் விவரித்திருந்த எம்.எம்.நரவானே, கிழக்கு லடாக்கின் ரோச்சின் லா மலை உள்ள இந்திய பகுதியில் 4 டாங்கிகளுடன் சீனா உள்ளே நுழைந்தது எனவும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பிரதமர் மோடியிடமும் செல்போனில் பேசியதாகவும், ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு உடனடியாக இந்திய ராணுவத்திற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் சீன ராணுவம் முன்னேறி வந்த போதும், இந்தியா தரப்பில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த உத்தரவு வரவில்லை என நரவானே எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, சீனா இந்திய பகுதிக்குள் வந்து ஆக்கிரமிக்கும் போது அமைதியாக இருப்பது தான் பாஜகவின் தேச பக்தியா? என கேள்வி எழுப்ப, ஒட்டு மொத்த பாஜக எம்.பி.க்களும் கொதித்து எழுந்தனர். மைக் அணைக்கப்பட்டதுஇன்னும் வெளியிடப்படாத, எந்த ஆதாரமும் இல்லாத செய்தியை வைத்து பேசுவதாக ராஜ்நாத்சிங்கும், அமித்ஷாவும் கொந்தளிக்க, இடையில் சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு அவை நடவடிக்கைகளுக்கு நேரடி தொடர்பு இல்லாத விஷயங்களை பேசினால் தடை செய்ய அதிகாரம் இருப்பதாக கூறினார். அப்போது பேசிய ராகுல்காந்தி இந்திய - சீன உறவுகள் குறித்து அவையில் பேசக்கூடாது என எந்த விதி சொல்லுகிறது என கேள்வி எழுப்ப, பேசிக் கொண்டிருக்கும் போதே ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டது அவையில் சூட்டை கிளப்பியது. கட்டுரையில் இருப்பது அனைத்தும் உண்மை தொடர்ச்சியாக, இடையூறுகளுக்கு மத்தியிலும் நாளிதழ் செய்தியை படிக்க தொடங்கினார் ராகுல் காந்தி. இதனையடுத்து, மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை, கடைசியில் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அவையில் இருந்து வெளியே வந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நாளிதழ் செய்தியை வாசிக்க ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? என கேள்வி எழுப்பியதோடு, அந்த கட்டுரையில் இருப்பது அனைத்தும் உண்மை என்றார். Related Link ஒரே நாளில் 2வது முறை உயர்ந்த தங்கம் விலை