கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி உள்ளன. மெக்சிகோ நாட்டில் "தி சாண்டா ரன்" என்கிற பெயரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாண்டா கிளாஸ் உடை அணிந்து, இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். மேலும், கோசோவோ நாட்டிலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சாண்டா கிளாஸ் உடையணிந்து வீதிகளில் வலம் வந்தனர்.