புதிதாக சந்தைக்கு வந்த டாடா நிறுவனத்தின் கர்வ் கார் 8,218 யூனிட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு மாடல்களில் கிடைக்கும் இந்த CURVV வகை கார்கள், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 3ஆயிரத்து455 யூனிட்டுகளும், செப்டம்பர் மாதம் 4ஆயிரத்து 763 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளது. CURVV காரின் ஆதிக்கம் காரணமாக சந்தையில் NEXON, கிரெட்டா வகை கார்களின் விற்பனை குறைந்துள்ளது.