தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு.மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 27 ஆம் தேதி வாக்கில் தெற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளிப் புயலாக மேலும் தீவிரமடையலாம் எனவும் கணிப்பு.தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, தெற்கு வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.அதே போல குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது எனவும் இது வலுப்பெறக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கொமோரின் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கொமோரின் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கைப் பகுதிகளில் இன்று, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது, இது மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த 22ஆம் தேதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்ற நிலையில் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது.