வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததுநாளை காலைக்குள் மேற்கு- வடமேற்காக நகரும் என எதிர்பார்ப்புதென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.வரும் 9ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், வரும் 10 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.