டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதேபோல் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 100 இந்திரா கேன்டீன்கள் தொடங்கப்பட்டு, 5 ரூபாய்க்கு சாப்பாடு போன்ற வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.