சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் மாநில அளவிலான புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை என மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.