இரு தரப்பையும் பாதிக்கும் மீனவர் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வு காண வேண்டும் என்பதே இலங்கையின் விருப்பம் அந்நாட்டின் அதிபர் அநுரகுமார திசநாயக தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் இணைந்து பேட்டியளித்த அவர், இழுவலை மீன்பிடிப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.