வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால், கூட்டத்தினரை ஒழுங்குபடுத்த கூடுதல் துணை ராணுவப் படையினா் மற்றும் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் மருத்துவ அவசரநிலையைக் கையாள பிரயாக்ராஜ் மாவட்டத்தின் மொத்த சுகாதாரத் துறை கட்டமைப்பும் முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.