இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வரும் நடிகர் தனுஷின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, தேனி, பொள்ளாச்சி, மதுரை சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தேனி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில், தனுஷ் புதிய தோற்றத்தில் பங்கேற்றார். ரசிகர்கள் அவரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.