தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படம் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோனது.