இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18 சதவிகிதமாக குறைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அறிவித்துள்ளார். அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்ததாக அவர் பகீர் கிளப்பிய நிலையில், வரியை குறைத்ததற்கு மட்டும் நன்றி தெரிவித்த மோடி, வர்த்தக ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விவகாரம் பற்றி வாய் திறக்காதது பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டுள்ளது. வியப்பில் ஆழ்த்திய அமெரிக்காவரி விதிப்பு, விசா கட்டுப்பாடு என இந்தியர்கள் மீது வெறுப்பை வாரி வீசி வந்த டிரம்ப், திடீரென ஓவர் நைட்டில் வரியை குறைப்பதாக அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்தியா மீது கடும் வரி அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கக்கி வந்த டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்திய பெருமையை சொந்தம் கொண்டாட அனுமதிக்காத ஆத்திரத்தில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கினார். குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதி உதவி வழங்குவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து இந்தியா மீதான வரியை பன் மடங்கு உயர்த்தி அதிர வைத்தார்.அதிரடியாக அறிவித்த டிரம்ப்டிரம்பின் இந்த அறிவிப்பால் நாட்டின் மின்னணு, உற்பத்தி, ஜவுளி, ஐடி துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு லட்சக்கணக்கான பேர் வேலையை இழக்கும் அளவு நிலைமை மோசமாக மாறியது. இந்நிலையில் தான், பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், திடீரென இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 18 சதவிகிதமாக குறைப்பதாக அதிரடியாக அறிவித்தார்.என்ன கூறினார் டிரம்ப்?உக்ரைனில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்ததால், வரியை குறைக்க முடிவு செய்ததாக டிரம்ப் விளக்கம் கொடுத்துள்ளார். அதோடு, இதுவரை ரஷ்யாவில் இருந்து வாங்கி வந்த கச்சா எண்ணெய்யை இனிமேல் வெனிசுலாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி இதுமட்டுமின்றி மிக முக்கியமாக இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்த டிரம்ப், இனிமேல் அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக பகீர் கிளப்பியிருக்கிறார். மேலும் எரிசக்தி, விவசாயம் உள்பட 500 பில்லியன் டாலர் மதிப்பில் பல்வேறு பொருட்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாகவும், இதன் மூலம் இந்தியாவுடனான அமெரிக்க உறவு மென் மேலும் வலுவுடன் முன்னோக்கி செல்லும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அதிபர் டிரம்ப்.மக்களுக்கு பெரிதளவு நன்மை கிடைக்கும்இதையடுத்து, இறக்குமதி வரியை குறைத்து உத்தரவிட்ட அதிபர் டிரம்புக்கு 140 கோடி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக கூறிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் போது, மக்களுக்கு பெரிதளவு நன்மை கிடைக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.விளக்கம் தரப்படுமா?அதேசமயம், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைப்பது மற்றும் வர்த்தக ஒப்பந்தம் போன்றவை பற்றி டிரம்ப் அறிவித்த எதையும் பிரதமர் மோடி உறுதி செய்யாதது, இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தனது நீண்ட கால நண்பனான ரஷ்யாவை இந்தியா கைவிட்டதாக டிரம்ப் கூறுவது உண்மையா.? அமெரிக்க பொருட்களுக்கு ஜீரோ வரி விதித்தால் பொருளாதாரம் என்னாவது? போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில் மத்திய அரசு தெளிவான விளக்கத்தை தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. Related Link விஜய்யின் கற்பனை திருக்குறள்