திருநெல்வேலி, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் மும்மதத்தினர் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசிய அவர், சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் திமுக தான் என்று கூறினார். கிறிஸ்துமஸ் பெருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. விழாவில் கல்லூரி மாணவிகள் பரதநாட்டியம், தப்பாட்டம், மற்றும் மோகினியாட்டம் அரங்கேற்றிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.