தமிழ், தமிழக மக்கள், பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்திற்கு பொழுது போக்கிற்காக ஒரு ஆளுநர் இருந்து வருவதாக சாடியுள்ளார்.