வரும் 29ஆம் தேதி திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம், கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டிசம்பர் ஒன்றாம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.