திமுகவைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களின் நலனுக்காக மதுக்கடைகளை நடத்திக் கொண்டு, அதை நியாயப்படுத்துவதற்காக மக்களை குடிகாரர்களாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.திமுகவைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களின் நலனுக்காக மதுக்கடைகளை நடத்திக் கொண்டு, அதை நியாயப்படுத்துவதற்காக மக்களை குடிகாரர்களாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசின் அரசியலமைப்புச் சட்டக் கடமை என குறிப்பிட்டுள்ளார். அதை நிறைவேற்றும் வகையில் உடனடியாக 1000 மதுக்கடைகளை மூடுவதோடு, அதன்பின் 6 மாதங்களுக்கு தலா 1000 மதுக்கடைகள் வீதம் மூடி திமுக ஆட்சிக்காலம் முடிவதற்குள் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.