இனிமேல் உங்களை அடித்தோ, திட்டியோ திருத்த முடியாமல் கையாலாகாமல் இருக்கிறோம், அதனால் வேறு வழி தெரியவில்லை என்று கூறி மாணவர்கள் முன்பு பள்ளி தலைமை ஆசிரியர் விழுந்து கும்பிட்டு, தோப்புக்கரணம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் அதிக சேட்டை செய்து படிக்காமல் ஜாலியாக இருந்து வந்ததாகவும், இதுகுறித்து பலமுறை அறிவுறுத்தியும் மாணவர்கள் அடங்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் காலை வேளையில் நடக்கும் பிரேயரில் மாணவர்களின் அட்டகாசங்களை பற்றி பேசி வருத்தப்பட்ட தலைமை ஆசிரியர், யாரும் எதிர்பாரத விதத்தில் அப்படியே குழந்தைகள் முன்பு விழுந்து கும்பிட்டு, தோப்புக்கரணம் போட்டு தனக்கு தானே சுய தண்டனை கொடுத்து கொண்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத குழந்தைகள் இனிமேல் பள்ளிக்கு ஒழுங்காக வருவோம் என்றும், பாடங்களை சரியான முறையில் படிப்போம் என்றும் கூறி தலைமை ஆசிரியரிடம் மனம் திருந்தி கெஞ்சினர்.