உலக புகழ்பெற்ற சூப்பர்பைக் உற்பத்தி நிறுவனமான டுகாட்டி, தனது ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மாடல் பைக்கை பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது. இந்தியாவில் 2025ஆம் ஆண்டு அறிமுகமாகும் இந்த மாடல் பைக், டுகாட்டியின் பனிகல் வி4 மாடலை அடிப்படையாக வைத்து அதிக சக்தி வாய்ந்த என்ஜின், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இரட்டை பக்க ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவற்றுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.