நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், கனரா வங்கியின் நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்து, 4 ஆயிரத்து 15 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் 3 ஆயிரத்து 606 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர லாபம் ஒவ்வொரு காலாண்டிலும் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.