தலைநகர் டெல்லியில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதிகாலை 5.36 மணியளவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது.