பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் தபால்தலை வெளியிட்டதற்காக மத்திய அரசுக்கும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரரும், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தருமான பெரும்பிடுகு முத்தரையரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தபால்தலை வெளியிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி, பெருமிதம் தெரிவித்துள்ளார்.