உத்தரபிரதேசம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை. மூத்த மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த இளைய மகன். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மைகளை கொட்டிய மூத்த மகன். தந்தை, சகோதரி, சிறுமி என மூன்று பேரையும் கோடாரியால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம். மூத்த மகனின் கொலை வெறிக்கு என்ன காரணம்? கொலையாளி கைது செய்யப்பட்டாரா? நடந்தது என்ன? உத்தரபிரதேசத்துல உள்ள பிரயாக்ராஜ் கங்கா நகர் பகுதிய சேந்தவரு ராம் சிங். இவருக்கு முகேஷ், முகுந்த், சாதனாதேவின்னு மூணு பசங்க இருக்காங்க. முகேஷ் எந்த ஒரு வேலை வெட்டிக்கும் போகாம ஊதாரியா ஊர் சுத்திட்டு இருந்துருக்காரு. இதனால முகேஷ் மேல வெறுப்புல இருந்துருக்காரு ராம் சிங். மூத்த மகன் இப்படி ஊதாரியா இருந்ததால, தன்னோட எல்லா சொத்தையும் இளைய மகன் முகுந்த் பெயருக்கே மாத்தி எழுதிக் கொடுத்துருக்காரு ராம்சிங். இதனால குடும்பத்துக்குள்ள பிரச்னை வெடிக்க ஆரம்பிச்சுருக்கு.உங்க சொத்துல எனக்கும் பங்கு இருக்கு, எல்லா சொத்தையும் முகுந்த்க்கே எழுதி வச்சா நான் என்ன பண்றது, எனக்கும் உங்க சொத்துல பங்க பிரிச்சு வைங்க, இல்லன்னா நான் யாரையும் சும்மா விடமாட்டேன்னு மிரட்டிருக்காரு. அதுக்கு ராம் சிங், நீ வேலை வெட்டிக்கு போகாம ஊதாரியா ஊர் சுத்திட்டு இருக்க, இந்த சொத்த உன் பெயருக்கு எழுதி வச்சன்னா, நீ அதையும் வித்து எல்லாத்தையும் அழிச்சுருவ, அதனால இந்த சொத்துல உனக்கு பங்கே கொடுக்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாரு. அதே மாதிரி, உன் தம்பி தான் பொறுப்பா இருக்கான், அதனால அவனுக்கு தான் எல்லா சொத்தும்ன்னு சொல்லிருக்காரு. இதனால முகேஷ்க்கு தன்னோட குடும்பத்துக்காரங்க மேல கோபம் அதிகமாகிருக்கு. சொத்து கிடைக்காத விரக்தியில இருந்த முகேஷ் வீட்ல இருந்த எல்லாரையும் கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு.சம்பவத்தன்னைக்கு நைட்டு, ராம்சிங் தன்னோட மகள் சாதனா தேவி மற்றும் பேத்தியோட வீட்ல தூங்கிட்டு இருந்தாரு. அப்ப முதல்ல தன்னோட தந்தை ராம் சிங் அறைக்கு போன முகேஷ் தந்தையோட கழுத்த நெரிச்சு கொன்னுருக்கான். இதபாத்த மகள் சாதனா தேவியும், அவங்க பேத்தியும் முகேஷ தடுத்துருக்காங்க. அப்ப ரெண்டு பேரையும் சரமாரியா தாக்குன முகேஷ், வீட்ல இருந்த கோடாரிய எடுத்துட்டு வந்து, மூணு பேரையும் முகத்துலையே கொடூரமா தாக்கிருக்கான். இதுல நிலைக்குலைந்த மூணு பேரும் சம்பவ இடத்துலையே துடிதுடிக்க உயிரிழந்துட்டாங்க. அடுத்து மூணு பேரோட சடலத்தையும் வெளியில எடுத்துட்டு போன முகேஷ் அங்குள்ள கிணத்துல வீசிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி வீட்ல இருந்துருக்கான். விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், முகேஷ அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.