ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாகப் பயன்படுத்தும் என்பதால், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். விக்கிரவாண்டியைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளது.