இரண்டு நாள்கள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், பிரதமருடனான சந்திப்பை பயனுள்ளதாக மாற்றுவது அவரது கைகளில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.