நடிகர் ரஜினிகாந்தின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்தின் முன்பு திரண்ட ரசிகர்கள் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் வெளி மாநிலத்துக்கு சென்றுள்ள நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்ட ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், எக்ஸ் தளம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.