ஹைதராபாத்தில், கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்த நடிகை சமந்தாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, செல்பி எடுக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. பவுன்சர்கள் ரசிகர்களிடமிருந்து அவரை பத்திரமாக மீட்டு காரில் அனுப்பி வைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன், தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு காருக்கு திரும்பிய நடிகை நிதி அகர்வாலை, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.