அசாமில் குழந்தைகள் முன்னிலையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சார் மாவட்டத்தில் கடந்த 22 ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது பக்கத்து வீட்டுகாரருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் பாதிக்கப்பட்ட பெண் பக்கத்து வீட்டுக்காரரை அவமதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இல்லாதபோது அவரது வீட்டிற்குள் நுழைந்து, பெண்ணின் வாய், கைகள் மற்றும் கால்களை கட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு பின்னர் உடலில் ஆசிட் ஊற்றி சென்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான முறையில் சிகிச்சை பெறும் நிலையில் தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.