அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல். மனுதாரர்களாக உள்ள அதிமுக, தவெக, உள்ளிட்ட கட்சிகளுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய நகல்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு. அரசியல் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே பொறுப்பு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் தகவல்.5 ஆயிரம் பேருக்கு மேல் கூடக் கூடிய அரசியல், கலாச்சார, மத நிகழ்வுகளுக்கும் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும். வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மதரீதியான கூட்டங்களுக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது என, தகவல்.