விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கர்நாடக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. இதில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி விஜய் ஹசாரே கோப்பையை வென்று அசத்தியுள்ளது.