தென் கொரிய விமான நிலையத்தில் பயணிகள் விமான திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூசன் நகரில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் நோக்கி மொத்தம் 176 பேருடன் ஏர் பூசன் என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. விமான ஊழியர்கள், பயணிகள் அனைவரையும் அவசரகால எஸ்கேப் ஸ்லைடு மூலம் பத்திரமாக வெளியேற்றினர்.