உத்தரபிரதேசம்... நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய கும்பல். கமுக்கமாகச் சென்று கதவு திறந்துவிட்ட பெண். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரைக் கொல்ல ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த மனைவி. கணவர் மின்சாரம் தாக்கி மயங்கிவிட்டதாக கூறி பக்கா ஆக்டிங். கொழுந்தனுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொன்றது ஏன்? கொலையாளிகள் போலீஸில் சிக்கியது எப்படி? நடந்தது என்ன? கணவருக்கு ஷாக்கடிச்சதால மயங்கிட்டாரு, ரொம்ப பயமா இருக்கு டாக்டர் என்னனு பாருங்கன்னு, கண்ணீரோடயும், முகத்துல பதற்றத்தோடயும் சொல்லியிருக்காங்க மனைவி. உடனே மருத்துவர்கள் கணவன பரிசோதனை பண்ணி பாத்தப்ப, அவரோட மார்பு பகுதில பஞ்சு திணிக்கப்பட்ட ஒரு கட்டு கட்டப்பட்டுருந்துருக்கு. அதோட உடல்கள்ல அங்க அங்க உறைந்த ரத்தமும் இருந்துருக்கு. அத பாத்த டாக்டர்களும், நர்ஸ்களும் மனைவிகிட்ட, ஷாக்கடிச்சிச்சு மயங்கி விழுந்துட்டதா சொல்றீங்க, ஆனா உடல்கள ரத்த காயங்களா இருக்கேன்னு கேட்ருக்காங்க. அதுக்கு, அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் டாக்டர், முதல என் கணவனுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்கன்னு மழுப்பலா பதில் சொல்லியிருக்காங்க மனைவி. இதுல ஏதோ வில்லங்கம் இருக்குங்குறத புரிஞ்சிக்கிட்ட டாக்டர்கள், உடனே போலீஸுக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லவே, கணவன அட்மிட் பண்ண மனைவியும், அவங்கக்கூட வந்த ஒரு ஆணும் அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க. அதுக்குப்பிறகு, ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, ஹாஸ்பிட்டல இருந்த சிசிடிவி காட்சிகள கைப்பற்றி தப்பிச்சு போனவங்கள மடக்கி பிடிச்சு விசாரணை பண்ணாங்க. அதுலதான், பல அதிர்ச்சியான விஷயமே தெரியவந்துருக்கு. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர்ல உள்ள கன்ஷி ராம் அப்டிங்குற பகுதிய சேர்ந்த சதாம் அலிக்கும், சவிதாவுக்கும் கடந்த 2017-ல கல்யாணம் நடந்துருக்கு. இந்த தம்பதிக்கு அஞ்சு வயசுல ஒரு மகன் இருக்கான். இந்த சூழல, சவிதாவுக்கும், சதாம் அலிக்கு தம்பி உறவு முறையான அர்பாஸுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்குது. இந்த பழக்கம் நாளடைவுல திருமணத்த மீறுன உறவா மாறிருக்கு. ஓவியரான சதாம் அலி வெளிய போன நேரம் பாத்து, அர்பாஸ் அடிக்கடி சவிதாவோட வீட்டுக்கு வந்திருக்கான். இத பாத்து அக்கம் பக்கத்துல உள்ளவங்க சதாம் அலிகிட்ட சொல்லிருக்காங்க. விஷயத்த கேட்டு கடுப்பான கணவர் சதாம், தன்னோட மனைவி சவிதாவ கண்டிச்சிருக்காரு. ஆனா, அதுக்கப்புறமும் சவிதா தன்னோட தகாத உறவ கைவிடாம தொடர்ந்துட்டே இருந்துருக்காங்க. இவ்வளவு சொல்லியும் திருந்தாம உன் இஷ்டத்துக்கு பண்றயானு சதாம், மனைவி சவிதாவ அடிச்சிருக்காரு. இனிமே நீ வெளியே போகக்கூடாது, யார்கூடவும் பேசக்கூடாதுன்னு செல்போனையும் வாங்கி வச்சிக்கிட்டாரு.சதாம் அலி இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிச்சதால கடுப்பான சவிதா, தன்னோட மைத்துனரும், ஆண் நண்பருமான அர்பாஸ்கூட சேர்ந்து கணவன கொல்ல பிளான் பண்ணிருக்காங்க. இதுக்காக, ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து, கூலிப்படைக்கு பணம் கொடுத்திருக்காங்க. பிளான்படி, நைட்டு 12 மணிக்கு, அர்பாஸ், கூலிப்படைய சேர்ந்த ரெண்டு பேர சவிதா வீட்டுக்கு கூப்டு வந்திருக்கான். கதவ லைட்டா தட்டுனதுமே சுதாரிச்சிக்கிட்ட சவிதா, மெதுவா போய் கதவ திறந்து விட்டிருக்காங்க. அதுக்கப்புறம், அர்பாஸ், கூலிப்படைய சேர்ந்த ரெண்டு பேரும் சேர்ந்து, ஆழ்ந்து தூங்கிட்டு இருந்த சதாம் அலியோட கழுத்த நெரிச்சதோட துப்பாக்கியால சுட்டுருக்காங்க. அதுல, சதாம் ஸ்பாட்டுலே உயிரிழந்துட்டாரு. அதுக்குப்பிறகு, போலீஸ்ல சிக்கிடக்கூடாது அப்டிங்குறதுக்காக சவிதாவும், அர்பாஸும் சேந்து துப்பாக்கியால் சுடப்பட்ட சதாம் அலியோட மார்பு பகுதில பஞ்ச திணிச்சு ஒரு கட்டு போட்டுருக்காங்க. அதுக்கப்புறம், சதாம் சடலத்த ஒரு ஆட்டோவுல உக்கார வச்சு ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போன ரெண்டு பேரும், சதாம் ஷாக்கடிச்சதால மூச்சு பேச்சு இல்லாம ஆகிட்டாருன்னு சொல்லி நாடகமாடிருக்காங்க. ஆனா, சதாம் அலியோட உடம்புல ரத்த காயங்கள் இருந்ததால ரெண்டு பேரும் மருத்துவர்கள்கிட்ட வசமா சிக்கிட்டாங்க. சிசிடிவி காட்சி அடிப்படையில, சவிதாவையும், அர்பாஸையும் பிடிச்சு விசாரிச்சதுல ரெண்டு பேரும் நடந்த உண்மை எல்லாத்தையும் சொல்லிருக்காங்க. அடுத்து, கணவன கொலை செஞ்ச சவிதா, ஆண் நண்பரான அர்பாஸ் மேலயும் கொலை வழக்குபதிவு பண்ண போலீஸ் அவங்கள அரெஸ்ட் பண்ணி சிறையில தள்ளிட்டாங்க.