போதை பொருள் புழக்கம் ஒழிப்பு நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மணிலாவின் முன்னாள் மேயரா இருந்த ரோட்ரிகோ பிலிப்பைன்ஸ் நாட்டில் புழக்கத்திலிருந்த போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க பலரை ஒட்டு மொத்தமா கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் போதை பொருளை கடத்தி விற்பனை செய்தவர்களை அவரே துப்பாக்கியால் சுட்டு கொன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம், முன்னாள் அதிபர் டியுடெர்ட்டியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்த நிலையில், அவரை மணிலா போலிசார் கைது செய்தனர்.இந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக ரோட்ரிகோ டியுடெர்ட் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பா நாட்டு மக்களுக்கு ரோட்ரிகோ பேசி வெளியிட்ட வீடியோவில், தான் தான் சட்டம் மற்றும் ராணுவத்தை வழிநடத்தினேன் என்றும் உங்களை பாதுகாப்பதாக சொன்னேன் அதற்கான அனைத்து பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.. இப்படி தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.