முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத் பலியான குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு, விமானியின் தவறே காரணம் என ராணுவ நிலைக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தியதால் தான் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டது.