வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தம். சத்தத்தை கேட்டு பதறியடித்து ஓடிய அக்கம் பக்கத்தினர். நடுவீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை. தப்பி ஓடிய கொலையாளியை தேடி வரும் போலீஸ். மூவரையும் கொலை செய்த நபர் யார்? அவர்களை கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன கோபம்? பின்னணி என்ன? நள்ளிரவில் வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தம்நைட்டு நேரம். வீட்ல இருந்து கணவன், மனைவி மற்றும் குழந்தையோட அலறல் சத்தம் கேட்ருக்கு. சத்தத்த கேட்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் அந்த வீட்டுக்கு ஓடிப் போய்ருக்காங்க. அப்ப நடுவீட்ல ஜிதேந்திர சோரனும், அவரோட மனைவி, பிஞ்சு குழந்தைன்னு மூணு பேரும் ரத்த வெள்ளத்துல உயிரிழந்து கிடந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலங்கள மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து இந்த கொலைக்கான காரணத்த பத்தி போலீசார் விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்ப ஜிதேந்திர சோரனுக்கும் அவரோட சகோதரருக்கும் ரொம்ப நாட்களா பிரச்னை இருக்கு, கொலை நடந்த நேரத்துல கூட சகோதரர் வீட்ல இல்லை, அதனால எங்களுக்கு அவரு மேல தான் சந்தேகமா இருக்குதுன்னு சொல்லிருக்காங்க. இதனால தலைமறைவா இருந்த சகோதரர போலீசார் வலைவீசி தேட ஆரம்பிச்சாங்க. சொத்துக்காக அடிக்கடி சண்டையிட்ட சகோதரர்கள்ஒடிசாவுல உள்ள கேந்துஜார் கிராமத்த சேந்த லஷ்மன் சோரனுக்கு, ஜிதேந்திர சோரன்னு ஒரு சகோதரன் இருக்காரு. இதுல ஜிதேந்திர சோரனுக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கு. அண்ணனும், தம்பியும் ஒரே வீட்ல இருந்தாலும் ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்க. ஏனா இவங்களுக்குள்ள ரொம்ப வருஷமா பூர்வீக சொத்து தொடர்பா பிரச்னை நீடிச்சுட்டே இருந்துருக்கு. லஷ்மன் சோரனுக்கு இப்ப வர கல்யாணம் ஆகல. இதுக்கிடையில பெற்றோர் கிட்ட லஷ்மன் சோரன் சொத்து எல்லாத்தையும் தன்னோட பேருக்கு எழுதி வைக்கும்படி கேட்ருக்காரு. அதுக்கு தாய், உனக்கே எல்லா சொத்தையும் எழுதிக் கொடுத்துட்டா, ஜிதேந்தரா என்ன பண்ணுவான், உனக்கு குடும்பம் குட்டின்னு எதுவுமே கிடையாது, ஆனா அவனுக்கு மனைவி, குழந்தை இருக்கு, அதனால என்னோட சொத்து எல்லாத்தையும் நான் ஜிதேந்திராவுக்கு தான் எழுதிக் கொடுப்பேன்னு சொல்லிருக்காங்க. இதனால லஷ்மன் வீட்ல இருந்த எல்லார் கிட்டயும் பிரச்னை பண்ணிக்கிட்டே இருந்துருக்காரு.கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி இந்த சொத்து விவகாரம் தொடர்பா அண்ணன் தம்பிக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. அப்ப ஊர் பெரியவங்க எல்லாரும் வீட்டுக்கு வந்து ரெண்டு பேரையும் சமாதானப்படுத்திருக்காங்க. இதனால அடுத்த கொஞ்ச நாட்கள் மட்டும் அண்ணனும் தம்பியும் அமைதியா இருந்துருக்காங்க. இதுக்கிடையில மறுபடியும் அண்ணன் தம்பிக்கு இடையில சொத்து பிரச்னை ஏற்பட்டிருக்கு. அப்ப லஷ்மன், ஜிதேந்திரா ஆபாச வார்த்தையால திட்டுனதா கூறப்படுது. இதனால கடும் ஆத்திரமடைஞ்ச லஷ்மன் வீட்ல இருந்த கோடாரிய வச்சு, அண்ணன சரமாரியா வெட்டிருக்காரு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச மனைவி தடுக்க வந்துருக்காங்க. ஆனா அவரையும் விட்டுவைக்காத கொடூரன் அவங்களையும், ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தையவும் ஈவு இரக்கம் இல்லாம வெட்டிக் கொன்னுட்டு அதே ஏரியாவுல பதுங்கிட்டான். விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் லஷ்மன்ன அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link அம்பலமான அரசு ஊழியரின் வேஷம்