புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து காக்கும் ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மிளகு மற்றும் உலர் திராட்சைகளை விவசாயிகள் விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜி.எஸ்.டி. வரியும் இல்லை என கூறினார்.