டெல்லியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்ததற்கு முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைநகரின் சட்டம் ஒழுங்கை கவனிக்காமல் எதிர்க்கட்சிகளை உடைக்கும் பணிகளிலேயே கவனம் செலுத்தலாமா என மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் போய் கேட்குமாறு கூறினார்.