சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 2வது நாளாக சரிந்ததால் மக்கள், சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். ஒரு சவரனுக்கு 7 ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 950 ரூபாய் குறைந்த ஆபரணத் தங்கம், 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 2 நாட்களில் ரூ.15,200 குறைந்த தங்கம்கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 15 ஆயிரம் ரூபாய் குறைந்த தங்கம் விலை, ஏறிய வேகத்தில் மீண்டும் விலை சரிந்ததால் நடுத்தர குடும்பத்தினர் ஆனந்தம் அடைந்துள்ளனர். வெள்ளியின் விலை பெரும் சரிவுதொடர் ஏற்றத்தில் இருந்த வெள்ளியின் விலை பெரும் சரிவை கண்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி, 55 ஆயிரம் ரூபாய் குறைந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விற்பனை ஆனது. ஆனந்த அதிர்ச்சி தந்த தங்கம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஜனவரி 31ஆம் தேதி, ஒரேநாளில் 7,600 ரூபாய் குறைந்தது. தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி 29ஆம் தேதி, அதிகபட்சமாக ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்தது. இதையடுத்து நேற்று ஜனவரி 30ஆம் தேதி, காலையில் சவரனுக்கு ரூ.4,800, பிற்பகலில் ரூ.2,800 குறைந்து மொத்தமாக, ஒரு சவரனுக்கு ரூ.7,600 குறைந்தது.இன்றும் விலை குறைவு இன்றும் ஜனவரி 31ஆம் தேதி, சனிக்கிழமையன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.7,600 குறைந்தது. இதன்படி, இன்று ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.950 குறைந்து ரூ.14,900க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் குறைவுவெள்ளி விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.350க்கும் ஒரு கிலோ ரூ.55,000 குறைந்து ரூ.3,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளியின் விலை உச்சத்தில் சென்றாலும் இன்று விலை உயரவில்லை என்பது, சாமானிய மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. Related Link கரூர் நெரிசல் - மவுனம் கலைத்தார் விஜய்