ஆபரணத் தங்கம் விலை, ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியிருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? எப்பொழுது தங்கம் வாங்கலாம்? தங்கத்தில் முதலீடு செய்யலாமா? இல்லை BOND-இல் முதலீடு செய்யலாமா? என்பன உள்ளிட்ட விவரங்களை நிபுணர் விளக்கத்தோடு பார்க்கலாம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 50 ரூபாயில் இருந்து 200 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 250 ரூபாயை எட்டியிருக்கிறது. இந்நிலையில், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதா என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் விளக்கம் அளித்துள்ளா