சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 880 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 110 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 280 ரூபாயாக உள்ளது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலையால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதையும் பாருங்கள் - சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்