கார்பரேஷன் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பிரஞ்சு மொழி படிக்கலாம், ஆனால் இந்தி மொழி படிக்க கூடாதா? என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிகத்தில் பல பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், அதற்கு பயந்து பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடப்பதாக குற்றம்சாட்டினார்.மேலும், சிறந்த கட்டுமானங்கள் கொண்ட பள்ளிக்கூடங்கள் அமையாததற்கு காரணம், பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு தமிழக அரசு கையெழுத்து போடாதது தான் என எச். ராஜா தெரிவித்தார்.