மகாராஷ்டிராவில் அரசு நடத்தும் விளையாட்டு வளாகத்தில் ரூபாய் 13,000 மாத சம்பளத்திற்கு பணிபுரியும் கணினி ஆபரேட்டர் ஒருவர், ரூபாய் 21 கோடி மோசடி செய்து, அதன் மூலம் தனது காதலிக்கு சொகுசு கார்கள் மற்றும் 4 BHK பிளாட் வாங்கி கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.