நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 8 புள்ளி 5 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ஜி.எஸ்.டி. வசூல் 34 ஆயிரத்து 141 கோடி ரூபாயாகவும், மாநில ஜி.எஸ்.டி. 43 ஆயிரத்து 47 கோடி ரூபாயாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. 91 ஆயிரத்து 828 கோடி ரூபாயாகவும் யாகவும், செஸ் 13 ஆயிரத்து 253 கோடி ரூபாயாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது